மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாயை சுளையாக அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு.! வெளியான அசத்தல் அறிவிப்பு

First Published | Nov 6, 2024, 7:06 AM IST

மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் 10ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை வழங்கப்படவுள்ளது. 

tamilnadu government

தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதிலும், கல்விக்காவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆராய்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை வழங்கவுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி  "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணக்கரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

college student

10ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கரின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். மேலும்  மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு  மாதம்  25,000 ரூபாயும் (3 வருடத்திற்கு) (fellowship)வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் 10,000 ரூபாயும் (6 மாதத்திற்கு) வழங்கப்படவுள்ளது.  

Latest Videos


Education Loan

உடனே விண்ணப்பிங்க

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை  "https://www.tn.gov.in/forms/deptname/1" என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் 05.11.2024 -லிருந்து இணையவழியிலும் (Online) மற்றும் இயன்முறையிலும் (Offline) வரவேற்கப்படுகின்றன.

college student

நேரடியாகவும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

இணையவழியில் (Online) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் "https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7" என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் Offline விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  "https://www.tn.gov.in/forms/deptname/1" என்ற  இணைப்பிலிருந்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி  இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  

பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்

இந்த புதிய திட்டங்கள் தொடர்பான  விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!