அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முக்கிய வழக்கில் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மே 28-ம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
24
தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை அடிப்படையாக வைத்து தான் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். தற்போது, அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு நீடிக்க வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
34
அண்ணா பல்கலைகழக மாணவி
இந்நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.