ஊட்டி தான் டாப்.. கொடைக்கானல், ஏற்காடு வெப்பநிலை என்ன? தமிழ்நாடு வெதர்மேன் குளு குளு அப்டேட்!

Published : Dec 15, 2025, 09:19 AM IST

Tamilnadu WeatherMan: கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலும், தாளவாடி, ஓசூர் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் வெப்பநிலை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. 

PREV
15
வாட்டி வதைக்கும் குளிர்

தமிழகத்தில் தற்போது கிழக்கு திசை காற்றின் காரணமாக இதுவரை இல்லாத வகையில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கார் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

25
சென்னையில் பனிமூட்டம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை தமிழத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பனி நிலவரம் குறித்து பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

35
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்: மலைப் பிரதேசங்களில் 11 டிகிரிக்கு கீழ் பதிவான இடங்களில் ஊட்டி முதலிடத்தை பிடித்துள்ளது. இது ஆந்திராவின் அரக்கு பகுதியை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடங்களில் கொடைக்கானல் 6.6 டிகிரி, கேரள மாநிலம் இடுக்கியில் 7.7, கர்நாடகாவின் ஹசன் 8.0, கேரளாவின் மூணாறு 8.5, குன்னூர் 8.8, கர்நாடகாவின் அகும்பேவில் 9.3, சேலம் ஏற்காட்டில் 9.4, கேரள மாநிலம் வயநாட்டில் 10.4, வால்பாறையில் 10.5, ஆந்திர மாநிலம் லம்பாசிங்கியில் 11.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.

45
வெப்பநிலை நிலவரம்

தமிழ்நாட்டில் உட்புறப் பகுதிகளில் 17 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களை பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 11.4, ஓசூரில் 13.5, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 13.5, சூளகிரி 14.9, தர்மபுரி மாவட்டம் பாலோட்டில் 15.2, அரூரில் 15.2, கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் 15.8, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 15.8, பழனியில் 15.9, கோவையில் 16.3, சேலம் மாவட்டம் ஓமலூரில் 16.4, தர்மபுரி 16.5, நாமக்கல் 16.6, திருப்பத்தூர் 16.6, நெய்வேலி 16.7, வேலூர் மாவட்டம் காட்பாடியில் 16.9, கரூர் 17.0 என்று வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

55
சென்னை 21 டிகிரி செல்சியஸ்

கடலோர தமிழ்நாட்டின் பிற இடங்களில் 21 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் 19, கடலூரில் 19.6, பாண்டி 19.7, சென்னை விமான நிலையம் 19.8, பரங்கிப்பேட்டை 19.8, காரைக்கால் 20, தூத்துக்குடி 20.2, தொண்டி 20.2, கும்மிடிப்பூண்டி 20.4, சென்னை 20.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories