தங்கத்தில் முதலீடு
இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அதன் விற்பனை மட்டும் இந்தியாவில் குறைவதில்லை.
இன்றைய நாட்களில் நிலத்திலும், தங்கத்திலும், தான் அதிக முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்தால், வருங்காலத்தில் அதிக இலாபத்தைக் கொடுக்கும் என்பது பலருடைய எண்ணமாக உள்ளது.
தங்கத்தின் மீதான வரி குறைப்பு
இந்தநிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வருகிறது. மேலும் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3,360 குறைந்துள்ளது. இந்தநிலையில் தான் கடந்த சனிக்கிழமை அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை உயர்ந்தது
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
அந்த வகையில் 22 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 6,415 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 51,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளி விலை கிராமுக்கு 89.50 காசுக்கு விற்பனையாகிறது.