Mettur Water : திடீரென குறைந்த நீர்.!கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு எத்தனை கன அடி நீர் வருகிறது தெரியுமா?

First Published | Jul 29, 2024, 7:18 AM IST

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதையடுத்து நேற்று அணையில் இருந்து 12ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று மாலை 1.60 லட்சம் வந்த கன அடி நீர் தற்போது 1.45 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam

மேட்டூர் அணை நீர்மட்டம்

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் எப்போதும் ஜூன் மாதம் விவசாயத்திற்கு திறக்கப்படும் நீரானது இந்தாண்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள் வறட்சியை சந்தித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக 35 முதல் 40 அடி நீர் மட்டத்தில் இருந்தது.

Vegetables Price List : தக்காளி, கேரட், பீன்ஸ் விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
 

மழையால் நிரம்பிய கர்நாடகா அணைகள்

எனவே மேட்டூர் அணை இந்தாண்டாவது நிறையுமா.? விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கூட தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் தான் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கிடு, கிடுவே மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது. கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகளில் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வெறு வழியின்றி கர்நாடகா அரசால் தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Tap to resize

மேட்டூர் அணை திறப்பு

ஆரம்பத்தில்12ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து 1.60 லட்சமாக உயர்ந்தது. இதனால் தமிழகத்தின் எல்லையான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த 15 நாட்களில் கிடு, கிடுவென உயர்ந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு 100 அடியை எட்டிய மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உருவானது. இந்தநிலையில்தான் நேற்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து 12ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

Mettur Dam History: பொங்கி வரும் காவிரி நீரை சேமிக்கும் பொக்கிஷம்-மேட்டூர் அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?

திடீரென குறைந்த நீர் வரத்து

தற்போது கர்நாடகா அணைக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்ததையடுத்து நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஒகேனக்கல்லிற்கு நேற்று மாலை 1.60 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 1.45 லட்சமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை 115அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து 1.52 லட்சம் கன அடியில் இருந்து 1.54 கன அடி நீராக குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுமா.? அல்லது குறைக்கப்படுமா என தெரியும் 

Latest Videos

click me!