Mettur Dam History: பொங்கி வரும் காவிரி நீரை சேமிக்கும் பொக்கிஷம்-மேட்டூர் அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?

First Published | Jul 28, 2024, 3:14 PM IST

விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணை கட்டப்பட்டு 90ஆண்டுகள் நிறைவடைந்து 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தனது முழு கொள்ளளவை எட்டியது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியும் மேட்டூர் அணையும்

தமிழகத்தில் டெல்டா மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மேட்டூர் அணையாகும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவிலிருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.

அங்கிருந்து விவசாய மக்களின் பயன்களுக்காகவும், குடிநீர் தேவைக்காவும் திறந்து விடப்படுகிறது. இந்த மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் பயன் அடைகின்றனர். 
 

மேட்டூர் அணைக்கு எதிர்ப்பு

காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி  ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில்  வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை  தான் உழவர்களின் தந்தை. இந்த மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை எட்டியுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதத்தோடு தனது 91வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளது.  

காவிரியின் குறுக்கே  மேட்டூர் அணையை கட்ட பல ஆண்டுகாலமாக மைசூர் சமஸ்தானம் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை. 1924-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் நிறைவடைந்து ஆகஸ்ட் 21-ஆம் நாள் தான்  அணை திறக்கப்பட்டது.
 

Latest Videos


மேட்டூர் அணையை கட்டியது யார்.?

மேட்டூர் அணை கட்டுவதற்கான திட்டங்களை முதன்முதலில் வகுத்தவர்களின் முதன்மையானவர் இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர். அவரது முயற்சி வெற்றியடையாத நிலையில் அடுத்ததாக  திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யாவின் வழிகாட்டுதலோடுஆங்கிலப் பொறியாளர்கள் எல்லீஸ் மற்றும் ஸ்டான்லி ஆகியோர் தலைமையில் 10ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பணியாளர்கள் பல ஆண்டுகள்  உழைத்து கட்டியது தான் மேட்டூர் அணை ஆகும். 

Mettur Dam

காவிரி- தமிழகம், கர்நாடகா மோதல்

இந்த அணையால் தமிழகத்தில் உள்ள விவசாயம் பெரிதும் பலனடைந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு தங்களுக்கு மட்டுமே கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

கர்நாடாகவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பினால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீதிமன்றத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

Mettur : மேட்டூர் அணை நிரம்ப போகுது.! முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுங்க-திமுக அரசுக்கு எடப்பாடி அட்வைஸ்

தமிழகத்திற்கு பொங்கி வரும் காவிரி நீர்

இந்தநிலையில் தான் கர்நாடக அரசால் 10ஆயிரம் அடி தண்ணீர் கூட திறந்து விட முடியாத என மறுத்து நிலையில் தான் இயற்கை அண்ணையே மழையாக இறங்கி வந்து  தமிழகத்திற்கு 1லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் திறந்தவிட வழி வகை செய்துள்ளது. இந்த நீர் வரத்து வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mettur dam open : இன்று மாலையே மேட்டூர் அணை திறப்பு.! எத்தனை அடி தெரியுமா.? தமிழக அரசு அறிவிப்பு

மேட்டூர் அணை திறப்பு

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று இரவே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தான் இன்று மாலையே முதல் கட்டமாக 12ஆயிரம் கன அடி நீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீரின் வரத்தை பொறுத்து வரும் நாட்களின் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

click me!