தீபாவளி தினத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.! ஒரு கிராம் இவ்வளவா.?

First Published | Oct 31, 2024, 10:25 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. புதிய உச்சத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. 

GOLD

தங்கத்தின் மீது மக்களின் ஆர்வம்

தங்கத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்ததில்லை. இதன் காரணமாக நாள் தோறும் தங்க நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தங்கம் வாங்குவது மட்டும் எப்போதும் தொய்வு ஏற்பட்டதில்லை. அந்த அளவிற்கு தங்கத்தின் மீது முதலீடு செய்ய மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.

குறிப்பாக தங்களது குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள், நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. எனவே அதனை கருத்தில் கொண்டே தங்கம் விற்பனையானது அதிகரித்து வருகிறது.

GOLD

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 10ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு கிராம் தங்கமே 30ஆயிரம் வரை செல்லும் எனவும், ஒரு சவரன் தங்கம் 2 லட்சம் ரூபாயை எட்டும் எனவும் தங்கம் நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து வருகிறார்கள். தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக  ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் அமெரிக்கா தேர்தல், மத்திய வங்கி வட்டி விகிதத்தை போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர காரணம் என கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Tap to resize

JEWELLERY

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலையானது ஒரு நாள் உச்சத்தை அடைந்தால், மற்றொரு நாள் குறைந்த அளவில் விலை குறையும். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் மக்கள் தங்கும் வாங்குவதால் விலையானது உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து 59 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 109க்கு விற்பனை செய்யப்படுகிறது

Latest Videos

click me!