தமிழக அரசின் நிதி உதவி திட்டங்கள்
தமிழகத்தில் மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு நேரடியாக உதவிடும் வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது போல ஏராளமான நிதி உதவி திட்டத்திற்கு நிதி முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் நிதி ஆதாரமாக டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறை உள்ளது. இங்கு தினந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வசூலாகி வருகிறது.
கோடிக்கணக்கில் கொட்டும் மது விற்பனை
குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினம் என்று சொன்னால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை செய்யப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய் படங்களின் வசூலை ஒரே நாளில் ஓரங்கட்டி பணத்தை குவிக்கிறது. அந்த வகையில், கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானது தமிழகம் முழுதும் நடைபெற்றது. இது 2023- 2024ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மது விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 12மணிக்கு தொடங்கும் மது விற்பனை இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பார்களில் இரவு 11 மணி வரை விற்பனையானது செய்யப்பட்டு வருகிறது.
tasmac
மது விற்பனை அதிகரிப்பு
மது குடித்தாலே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் காலம் மாறி மது குடிப்பதே தற்போது பேஷனாகிவிட்டது. மது குடிக்காதவர்களை கிண்டல் செய்யும் நிகழ்வு தான் தொடந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கையிலும் மது கோப்பைகள் காட்சி அளிக்கிறது. நட்சத்திர விடுதிகளில் மது விருந்தில் ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கும் வகையில் மற்றொரு பக்கம் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனைத்து நாட்களும் செயல்படும். குறிப்பாக விஷேச நாட்களில் தான் கூடுதல் விற்பனையே நடைபெறும்.
மதுக்கடைக்கு விடுமுறை
ஆனால் அந்த டாஸ்மாக் கடைக்கே வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் முக்கிய கோயில் விழாக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாகவும் மதுக்கடைகள் மூடப்படுகிறது. அந்த வகையில், வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Puducherry
காந்தி ஜெயந்தி விடுமுறை
குறிப்பாக அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கடைகளை திறந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.