Published : May 21, 2025, 08:18 AM ISTUpdated : May 21, 2025, 08:19 AM IST
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இலவச இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெற்றோரை இழந்தோர், முதல் பட்டதாரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை.
மாணவர்களுக்கு கல்வி தான் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய படியாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவி தொகை முதல் இலவச கல்வி வரை பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர பல கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
26
சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டம்
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக 2025-2026 இலவசக் கல்வித்திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைபடிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
36
யாருக்கெல்லாம் இலவச கல்வி
ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும். (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கை)
பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள்
(1/3d of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
(1/3 of seats) முதல் பட்டதாரி மாணவர்கள், ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள்
(1/3d of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும்
ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
56
தேவையான ஆவணங்கள்
தகுதி:
மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருட வருமானம் < 3,00,000
தேவையான சான்றுகள்:
பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ்
66
விண்ணப்பிக்க கடைசி நாள்
சமீபத்திய வருமான சான்றிதழ்
இலவசக் கல்வித்திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) 26.05.2025-5 பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.