பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது அல்லது தனித்து போட்டியிட போகிறதா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
24
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதைவிட வேறு என்ன வேண்டும். அரசியல் எதிரி திமுகவுடனும், கொள்கை எதிரி பாஜகவுடனும் கூட்டணி இல்லை. பாஜக. உடன் இருப்பதால் அதிமுகவுடனும் தவெக கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம்.
34
அதிமுகவை எதிர்க்காததற்கு இதுதான் காரணம்
அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக சமீபத்தில் நடந்த பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. அதிகவுக்கு மக்களே நல்ல தண்டனை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு எந்த காரணம் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு என்று கூறினார்.
இந்நிலையில் அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுகவை பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை. இன்று த.வெ.க.-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.