ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பளராக இருந்து வந்தார். இவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அரக்கோணத்தில் எங்கு புகார் மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததை அடுத்து டிஜிபி அலவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
24
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே? என கேள்வி எழுப்பியிருந்தார்.
34
நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு
மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து தெய்வசெயல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.