அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா.! பொதுமக்களுக்காக வெளியான தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

First Published | Sep 29, 2024, 8:39 AM IST

தமிழக அரசின் அறநிலையத்துறை, மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் மற்றும் சுவாமிமலை ஆகிய திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

sekar babu

தமிழக அரசின் அறநிலையத்துறை திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக அறநிலையத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 805 கோவில்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 703 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஆயிரக்கணக்கான கோவிக்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அன்னதானம் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.

ரூ.321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுவாவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம் மற்றும் காசிக்கு இலவச சுற்றுலாவும் செயப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள முதியோர்கள் சிறப்பு வழிபாடு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

RAMESWARAM TO KASI

அம்மன், பெருமாள் கோயில்களுக்கு இலவச பயணம்

அடுத்ததாக ஆடி மாதத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் ஊர் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கூழ்கள் ஊற்றியும்,  திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு இலவசமாக சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.  

இதனை தொடர்ந்து புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாள் கோயில்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருக்கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட முதியோர்கள்  தலா 1,000 பக்தர்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

Tap to resize

MURUGAN TEMPLE

அறுபடை முருகன் கோயில் சுற்றுலா

இதனையடுத்து தற்போது  தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணம் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலிருந்து 06.10.2024 அன்று தொடங்குகிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  

மேலும் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும். புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டும் வருகிறது. இதுமட்டுமில்லாமல் இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 

sekar babu

1000 பக்தர்களுக்கு இலவச பயணம்

இந்தநிலையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இதற்கான விண்ணப்பப் ஏற்கனவே தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் இலவச பயணத்தின் மூலம் பயன்பெற்றனர். அதன்படி முதற்கட்டப் கந்தக்கோட்டத்திலிருந்தும், இரண்டாம் கட்டப் பயணம் சென்னை, பயணம் பழநியிலிருந்தும். மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரிலிருந்தும், நான்காம் கட்டப் பயணம் சுவாமிமலையிலிருந்தும் புறப்பட்டன. இந்த ஆன்மிகப் பயணத்தில் இதுவரை 813 மூத்த குடிமக்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

ARUPADAI

அக்டோபர் 6ஆம் தேதி பயணம்

இதன் அடுத்தக்கட்டமாக  அக்டோபர் 6ஆம் தேதி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் சேலம் மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் 5ஆம்  கட்ட அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் திருத்தணியிலிருந்து புறப்படப்பட உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப். டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். அறுபடை முருகன் கோயில் சுற்றுலா திட்டத்திற்கு செல்லும் மூத்த குடிமக்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். இந்தப் பயணம் திருத்தணியில் தொடங்கி பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகியவற்றிற்கு சென்று சுவாமிமலையில் நிறைவடைகிறது. இந்த திட்டத்தின் அடுத்தக்கட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!