KS Masthan: செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? அதுவும் ஒரே மாவட்டத்தில் இப்படியா?

First Published | Sep 29, 2024, 8:15 AM IST

DMK Removes Minister KS Masthan: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும் இருந்த செஞ்சி மஸ்தானின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. 

Gingee KS Masthan

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருந்து வந்தார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை உள் அடக்கியது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. 

KS Masthan

இதனையடுத்து கடந்த ஆண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சரின் மகனுமான மொக்தியார் அலி மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான். இவர் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Government School Teacher: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!


Son-in-law of Gingee KS Masthan

கடந்த ஆண்டு திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதங்களையும் திமுக தலைமைக்கு அனுப்பினர். அதில் திண்டிவனம் நகரமன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருக்கிறார். நகராட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான்  அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

இதையும் படிங்க: Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலை குறைகிறது! எவ்வளவு தெரியுமா? வெளியாக போகும் அறிவிப்பு!

KS Masthan Family Dominance

இவர்கள் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியது. மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக, விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுவதும் செஞ்சி மஸ்தானின் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தலைமைக்குப் புகார்களும் பறந்த வண்ணம் இருந்தன. 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரனுக்கு எந்த அமைச்சரவை தெரியுமா.? வெளியான தகவல்

DMK Removes Minister KS Masthan

இதனால், செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மக்களவை தேர்தல் நேரத்தில் செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜூன் மாதம் 11ம் தேதி செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரத்தை சேர்ந்த டாக்டர் ப.சேகர் புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதே அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் சிறுபான்மையினர் இல்லாத அமைச்சரவை என்ற விமர்சனங்கள் எழாத வகையில் மீண்டும் நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Ponmudi

அதேபோல் மூத்த அமைச்சர் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை இலாக்கா மாற்றப்பட்டு அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இருவரும் அமைச்சர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மூத்த அமைச்சர் பொன்முடியின் இலாக்காவும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!