செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரனுக்கு எந்த அமைச்சரவை தெரியுமா.? வெளியான தகவல்

First Published Sep 29, 2024, 7:37 AM IST

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பதவியேற்றதிலிருந்து இதுவரை 5 முறை அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளது. சமீபத்திய மாற்றத்தில், சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பல அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.

4ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் திமுக அரசு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றது. 3 வருடங்கள் நிறைவு பெற்று 4-வது ஆண்டில் சென்று கொண்டி ருக்கிறது. அந்த வகையில் அமைச்சரவையில் மூத்த மற்றும் இளம் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலும், சர்ச்சையில் சிக்கியதாலும் 4 முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,  முதலாவதாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் துறை வழங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அரசு அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணத்தால் போக்குவரத்து துறை ராஜகண்ணப்பனிடம் இருந்து பறிக்கப்பட்டது. . 
 

M K Stalin

அமைச்சரவையில் மாற்றங்கள்

 இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில்  2-வது முறை யாக மிகப்பெரிய அளவில் அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றத்தை சந்தித்தது.  ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்டவர்களின் அமைச்சரவை மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியை ஸ்டாலினை அமைச்சரவையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில்  சேர்க்கப்பட்டார்.

அப்போது அவருக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அமைச்சர் நாசர் சர்ச்சையில் சிக்கினார். மேலும் பால்வளத்துறையை சரியாக செயல்படுத்த முடியாமல் தடுமாறினார். இதுமட்டுமில்லாமல் திமுக நிர்வாகிகள் மீது கல்லை தூக்கிய எரிந்த வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டார். அப்போது டி ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 

Latest Videos


செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு

அடுத்ததாக தங்கம் தென்னரசிடம் இருந்த தொழில் துறை டிஆர்பி ராஜாவிற்கு வழங்கப்பட்டது. பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டது. பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்ப துறை வழங்கப்பட்டது. மனோ தங்கராஜூக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் கவனித்து வந்த துறைகளான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை  தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.  

இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை 5 வது முறையாக நேற்று மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த மூத்த அமைச்சர் பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு  நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரத்துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.  கயல்விழிக்கு  மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.  இதே போல மூத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பன் இதுவரை 3வது முறையாக துறைகள் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அமைச்சரவையில் இருந்து  அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமசந்திரன் நீக்கப்பட்டுள்ளனர். செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. . 

புதியவர்களுக்கு வாய்ப்பு

இதே போல பால்வளத்துறையில் சிக்கி மனோ தங்கராஜூன் பதவியை இழந்துள்ளார். இதே போல ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழக அமைச்சரவையில் மீண்டும் அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கோவி செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்படும் எனவும், நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும்,ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை வழங்கப்படவுள்ளது. 

click me!