Tamil Nadu Cabinet Reshuffle: கைமாறும் உயர்கல்வி! பால் வளம்! புதிய அமைச்சர்கள் யார்? வெளியான புதிய தகவல்!

First Published Sep 28, 2024, 1:34 PM IST

Tamil Nadu Cabinet Reshuffle: தமிழகத்தில் திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில்  திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 4வது ஆண்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 3 ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்பட்டு மற்றவர்களுக்கு துறை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. இதில், புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். 

இந்நிலையில் விரைவில் துணை முதலைமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மூத்த அமைச்சர்களும் ஆதரவு  தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில்  அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால்  அமைச்சரவை மாற்றம் ஏற்படுவது உறுதி. ஆனால் எப்போது என்று தெரியாமல் இருந்து வந்தது. 

இதையும் படிங்க: Government School Teacher: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Latest Videos


இதனிடையே அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தானாகவே முன்வந்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். சுமார் 471 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அப்போதே அமைச்சரவை மாற்றம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வெளியே செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் வகையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் பட்சத்தில் கூடுதல் இலாகாக்கள்  வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள் என எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  வெயிலுக்கு குட்பை! மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்! சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. 

இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர். சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது என தெரிவித்துள்ளார். 

அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் கூறுவதை பார்த்தால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சிறுபான்மைத்துறை அமைச்சராக இருக்கும் மஸ்தான் பதவி பறிக்கப்பட்டு அதே சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நாசருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!