Government School Teacher: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

First Published | Sep 28, 2024, 10:02 AM IST

Government School Teacher: தமிழ்நாட்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவீன கற்றல் - கற்பித்தல் முறைகளை மேம்படுத்த டேப்லெட் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 

Government School

தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கப்பட்டு கல்வி கற்கப்பிக்கப்பட்டுகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகளை பொறுத்தவரை மாணவர்கள் கரும்பலகை இல்லாமல் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு செயல்படுத்தி வருகிறது. 

Government School Teacher

இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் தொடர்பான தகவல்கள், மாணவர்களின் மதிப்பெண்கள் தகவல்கள், மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் எமிஸ் எனப்படும் ஆன்லைன் செயலியில் பதவியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

Latest Videos


School Education Department

இந்நிலையில் மாறி வரும் கற்றல் - கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

Government School Teacher Tablet

இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-24) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101.48 கோடியில் டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணிகளுக்கும் இது வழி செய்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

Tamilnadu Government

இந்நிலையில், தொடர்ந்து 2-வது கட்டமாக நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் செயல்பாடுகளை துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!