வெயிலுக்கு குட்பை! மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்! சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

First Published Sep 27, 2024, 3:11 PM IST

Tamil Nadu Weatherman: தமிழகத்தில் பல நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, வட மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தென் மாவட்டங்களிலும் மழை படிப்படியாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Temperature

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஆனால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். 

tamilnadu weatherman

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்றும், நாளையும் மதுரை, திருச்சி, ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் குறையும். இதுவரை வறண்ட தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்திலும் மழை படிப்படியாக அதிகரிக்கும். நேற்று சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Latest Videos


Heavy Rain

வட தமிழகம் மட்டுமின்றி, தென் தமிழகம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே, அது வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் மாதம் தமிழகத்தில் மழை படிப்படியாக அதிகரிக்கும். அதேபோல், இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிறைய மழை இடைவெளிகள் வரலாம் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

Chennai Meteorological Department

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உள் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tamilnadu Rain

28ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!