இலவசமாக இன்று மெட்ரோவில் பயணிக்கலாம்.!! யாருக்கெல்லாம் தெரியுமா.?

Published : Oct 04, 2025, 07:18 AM IST

சென்னையில் 04.10.2025 அன்று நடைபெறும் "Rock on Harris 3.0" இசை நிகழ்ச்சிக்கு செல்பவர்கள், தங்கள் நிகழ்ச்சி நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தியே மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம். 

PREV
14

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் பல லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி, இசை நிகழ்ச்சிகளில் பார்க்க செல்லும் பார்வையாளர்களுக்கு இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், இன்று 04.10.2025 "Rock on Harris 3.0- இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

24

Noise and Grains Private Limited ஆனது ராக் ஆன் ஹாரிஸ் 3.0 இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ இரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் தனித்தனி நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (Event Ticket) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 04.10.2025 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).

34

இந்தப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையிலுள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் நந்தனம் மெட்ரோ நிலையம் வரை சென்று வரலாம். இதற்கு, மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் QR / Barcode-ஐ ஸ்கேன் செய்யலாம்.

நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am 05.10.2025), விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12:15 மணிக்கும் (12.15 am - 05.10.2025), புறப்படும்.

44

பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். 

பச்சை இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories