பாஜகவில் இருந்து முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கப்போகும் தவெக? அரசியல் களத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்!

Published : Jul 25, 2025, 09:24 AM IST

பாஜகவில் எதிர்பார்த்த பதவி கிடைக்காததால், விஜயதரணி அதிருப்தியில் உள்ளதாகவும், தவெகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

PREV
15
விஜயதரணி

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விளவங்​கோடு சட்​டப்​பேரவை தொகு​தி​யில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றவர். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். ஆனால், விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆகையால், எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி எப்படியாவது சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், ராகுல்காந்தி நெருக்கம் மற்றும் அனுதாபம் ஓட்டு கிடைக்கும் என்ற அடிப்படையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

25
விஜயதரணி பாஜகவில் ஐக்கியம்

அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதரணி தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். மேலும் மாநில காங்​கிரஸ் தலை​வர் பதவி கிடைக்​கும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் டெல்லி காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

35
பதவி கிடைக்காத விரக்தியில் விஜயதரணி

இதனையடுத்து மக்​கள​வைத் தேர்​தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜரதரணி விருப்​பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்க வாய்ப்பு வழங்காமல் பொன்​.​ரா​தாகிருஷ்ணனுக்கே கன்​னி​யாகுமரி தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்​பளித்​தது பாஜக தலை​மை. அதுமட்டுமல்ல விளவங்​கோடு இடைத்தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாஜக கட்சியில் சேர்ந்த எனக்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை என தனது ஆதங்கத்தை விஜயதரணி வெளிப்படுத்தினார்.

45
தவெக விஜய்

இந்நிலையில் பதவி கிடைக்காத நிலையில் அதிருப்தியில் இருந்து வரும் விஜயதரணி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை விஜயதரணி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

55
விஜயதரணி மறுப்பு

இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி விஜயதரணியை தொடர்பு கொண்டு கேட்ட போது:- தேசிய கட்சியான பாஜகவை நம்பி வந்துள்ளேன். விரைவில் எனக்கு பதவி வழங்​கு​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. யூகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளில் உண்மை இல்லை. நம்பிக்கையோடுபாஜகவின் அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். என் நம்பிக்கை வீண் போகாது என நம்பு கிறேன் என தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் இதுவரை நிதானமாக ஆடி வந்த தவெக தலைவர் விஜய் இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளே நிலையில் ஆளும் திமுகவுக்கு எதிராக அடித்து ஆடி வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories