கடந்த காலத்தில் நீங்கள் பேசிய பேச்சுக்களையும் உங்களுக்காகத் தீக்குளித்து உயிர் விட்டவர்களையும் திரும்பக் கொண்டு வந்து விடுவீர்களா வைகோ? இப்படித்தான் மிகக் கேவலமாக இருக்கிறது உங்கள் வாடிக்கை. ஒவ்வொருவரும் உயிரைக் கொடுத்து உங்களுக்காக உழைத்தார்கள். எத்தனை நாட்கள்! எத்தனை ஆண்டுகள்! ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதன் அடிப்படையில் எவ்வாறு சீரழிந்து ஒன்றுமில்லாமல் போனது!? எவ்வளவு பேர் எதிர்பார்ப்பில் இருந்து மனமொடிந்து போயிருப்பார்கள்!?
எந்தப் பலாபலனும் இல்லாமல் இளமை காலம் பொருள் அனைத்தையும் இழந்து அவர்களது அரசியல் வாழ்க்கை காற்றில் கரைந்தே போய்விட்டது.. எத்தனை பேரை உங்களுடைய சுயலாபத்திற்காக புறம் தள்ளினீர்கள். ஒதுக்கி வைத்தீர்கள் அந்த பாவம் எல்லாம் உங்களைச் சும்மா விடுமா? 10 வருடம் 20 வருடங்களுக்கு மேலாக உங்களுக்காக உழைத்து உங்கள் அருகிலேயே இருந்தவர்களுக்கு நீங்கள் என்ன நன்றி கடன் பட்டடீர்கள்! அவர்களை அண்ட விடாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு இன்றைக்கு வந்து துரதிர்ஷடம் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்! வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! நீங்கள் ஏதோ பதவி சுகத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம்! எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.