Kayalvizhi Join TVK: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி தவெகவில்? யார் இந்த கயல்விழி? அதிர வைக்கும் பின்னணி

Published : May 22, 2026, 05:55 PM IST

MK Alagiri Daughter: முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, அவரை மீண்டும் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
விஜய் பதவியேற்பு விழாவில் மு.க. அழகிரி மகள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 10ம் தேதி அன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் பேத்தியும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

25
திமுகவினரை கண்டித்த கயல்விழி

இந்த விழாவில் பங்கேற்ற அவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது விஜய் வரலாறு படைத்துள்ளார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும் மேலும் அவர் நல்லது செய்ய வேண்டும். ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம். ஒரு இளைஞர் வந்திருக்கிறார். நிச்சயமாக அவர் நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். 100 சதவீதம் அவரை நம்புகிறேன். நிஜமாகவே அவர் மிகவும் கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றுள்ளார் என்று அவரை பாராட்டிருந்தார். விரைவில் கயல்விழி தவெகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. தேர்தலுக்கு முன்னதாகவே விஜய்யை விமர்சித்த திமுகவினரை கயல்விழி கண்டித்திருந்தார்.

35
முதல்வர் விஜய்யை மீண்டும் சந்தித்த கயல்விழி

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கட்சி பணிகளை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மதுரை மாநகராட்சியின் மேயர் பதவியை அவர் குறிவைத்து உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கயல்விழி தீவிரமாகச் செயல்படுவதாகவும், குறிப்பாக மதுரை மாநகராட்சியின் மேயர் பதவியை கயல்விழி குறிவைத்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஒருவேளை கயல்விழி தவெகவில் இணையும் பட்சத்தில் தென் மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் என்பது குறிப்பித்தக்கது.

45
மு.க.அழகிரி

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் மு.க.அழகிரிக்கு மிகப்பெரும் ஆதரவாளர் இருந்து வந்தனர். கருணாநிதி மறைவை அடுத்து கட்சி ஸ்டாலினிடம் சென்றது. இதனையடுத்து அழகிரியிடம் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். பின்னர் பிரபல நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார்.

55
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மாற்று கட்சியில்

மு.க.அழகிரி, ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து 2014-ல் அவருடன் சேர்த்து நீக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்போது திமுகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தும் முடியவில்லை. மு.க.அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளரும், வலதுகரம், நிழல் என்று அழைக்கப்பட்டவருமான பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories