பாஜக ஆதரவாக களம் இறங்கிய அதிமுக மாஜி எம்எல்ஏ.! அதிரடியாக கட்சியை விட்டு தூக்கிய எடப்பாடி

Published : Mar 07, 2025, 11:30 AM ISTUpdated : Mar 07, 2025, 06:52 PM IST

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
பாஜக ஆதரவாக களம் இறங்கிய அதிமுக மாஜி எம்எல்ஏ.! அதிரடியாக கட்சியை விட்டு தூக்கிய எடப்பாடி
Former AIADMK MLA Vijayakumar was removed : தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியான திமுக தொடர்ந்து போராடி வருகிறது. இதே கருத்தை அதிமுகவும் தெரிவித்து வருகிறது  குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தேவை எனவும், இந்தியை திணிக்க கூடாது என தெரிவித்து வருகிறது. இதனால் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு செயல்படுத்த மறுத்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய 2152 கோடியை மத்திய அரசு தராமல் நிறுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வலியுறுத்தி பாஜக சார்பாக கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
24
மும்மொழி கொள்கை அதிமுக எதிர்ப்பு

அதன் படி நேற்று முன்தினம், தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை அந்த அந்த மாவட்டத்தில் பாஜகவினர் பெற்று வருகிறார்கள். அதன் படி பள்ளி மாணவர்கள், மக்கள் கூடும் இடங்களில் கையெழுத்து பெற்று வருகிறார்கள், இந்த சூழ்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார்.

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் தொடர்ந்து இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜயக்குமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

34
மும்மொழி கொளைகைக்கு அதிமுக மாஜி எம்எல்ஏ ஆதரவு

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

44
கட்சியை விட்டு தூக்கிய எடப்பாடி

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த  K.S. விஜயகுமார், Ex. M.L.A., (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories