தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. டிரம்ப் வரிகள், முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
GOLD RATE TODAY தங்கம் விலையானது நாளுக்கு நாள் புதிய புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதன் படி 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாகவே மாறி உள்ளது. சுமார் 2 மாத காலத்தில் ஒரு சவரனுக்கு 4ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
24
தங்கம் விலை உயர்வுக்கு என்ன.?
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் அமெரிக்க அதிபராதக டிரம்ப் பதவியேற்றதன் மூலம் மற்ற நாடுகள் மீது தொடர்ந்து பல்வேறு வரிகளை விதித்து வருகிறார். இதனால் வர்த்த போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து பங்கு சந்தையில் முதலீடு செய்தவை விட தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பு என்பதால் பல்வேறு நாடுகள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
34
ஒரே நாளில் ஏறி இறங்கிய தங்கம் விலை
இந்த நிலையில் நேற்று காலையில் இறங்கிய தங்கம் விலை மதியம் மீண்டும் அதிகரித்தது. அதன் படி, காலையில் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,020க்கும் ரூபா்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 64,160ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8060ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
44
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 7990 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையானது சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்களை ஆறுதல் அடையவைத்துள்ளது.