அதாவது 3வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரை 45.8 கிமீ தூரத்திலும்,
4வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திலும், 5வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திலும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
மேற்கண்ட இந்த வழித்தடங்களில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடமும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை செல்லும் வழித்தடமும், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகின்றன. இந்த இடத்தில் இரட்டை இரண்டடுக்கு மெட்ரோ பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த டபுள் டக்கர் மெட்ரோ பாலத்தில் 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் நான்காம் வழித்தடம் 50 அடி உயரத்திலும், ஐந்தாம் வழித்தடம் 70 அடி உயரத்திலும் ஒரே தூணில் இணையும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.