தமிழகத்தில் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்து விட்டால் சொல்லாவ வேண்டும். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி புதன் கிழமை ஆயுத பூஜை, 2-ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 4,5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாகும். எனவே, அக்டோபர் 3-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.