தி.மலையில் தங்கச்சி கண்முன்னே இளம்பெண்! கதறியும் விடாத 2 காவலர்கள்! திமுகவை எகிறி அடிக்கும் இபிஎஸ்!

Published : Sep 30, 2025, 02:20 PM IST

Tiruvannamalai Rape Case: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்ணை, அவரது சகோதரி கண்முன்னே இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

PREV
14
இளம்பெண் பலாத்காரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து இளம்பெண் மற்றும் அவரது சகோதரி சாமி தரிசனத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஏந்தல் புறவழிச்சாலைக்கு செல்லும் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு காவலர்கள் இளம்பெண்களை நைசாக அழைத்து சென்று அருகில் இருந்த தோப்பில் வைத்து சகோதரி கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

24
காவலர்கள் கைது

பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

34
எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

44
ஸ்டாலின் மாடல் திமுக

இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories