கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்கவில்லையா.? கிடு, கிடுவென அதிகரித்த அபராதம்- சட்டசபையில் தகவல்

Published : Apr 21, 2025, 11:23 AM IST

தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், அபராதம் ரூ.500ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

PREV
15
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்கவில்லையா.? கிடு, கிடுவென அதிகரித்த அபராதம்- சட்டசபையில் தகவல்

Tamil name boards Fine increase : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும், தொகுதி கோரிக்கை தொடர்பாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றும், தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன்,

25
Tamil name boards

தமிழில் பெயர் பலகை- அபராதம் அதிகரிப்பு

வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொழிலாளர் நலத்துறை தான் என்றும், இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும், 500 ரூபாய் அபராதம் இருந்தது தற்போது 2 ஆயிரமாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழில் பெயர் பலகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட படிப்படியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

35
Law to eradicate superstition

மூடநம்பிக்கை ஒழிக்க தனிச்சட்டம்

இதே போல திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மூடநம்பிக்கையை ஒழிக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா ? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒருவருக்கு நம்பிக்கையாக இருப்பது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கிறது என்றும்,

அவரவர் உரிமையில் தலையிடுவது சரியாக இருக்காது என கூறினார். மேலும், நம்முடைய கொள்கைகளை பின்பற்றலாம் அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக்குமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

45
Sivaji statue trichy

சிவாஜி சிலை திறப்பு

சட்டப்பேரவையில் திருச்சிராப்பள்ளி பாலக்கரை பிரசாத் திரையரங்கம் அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிறுவப்பட்ட சிலையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், பாலக்கரை பிரசாத் திரையரங்கம் அருகில் ஏற்கனவே சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளதாகும்.

55
Sivaji statue

திருச்சியில் சிவாஜி சிலை

ஆனால் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது என்றும் அதற்கான காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் எனவும் கூறினார். பொது இடத்தில் சிலை இருப்பதால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி, சிவாஜி கணேசன் சிலை மக்கள் பார்க்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விரைவில் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்

Read more Photos on
click me!

Recommended Stories