திமுகவுடன் சேர்ந்து விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி.! கொந்தளித்த மாரிதாஸ்.! கொத்தாய் தூக்கிய போலீஸ்.!

Published : Oct 04, 2025, 02:08 PM IST

பிரபல யூடியூபர் மாரிதாஸ், நடிகர் விஜய் தொடர்பான நீதிமன்ற வழக்கில் திமுகவை விமர்சித்து வீடியோ வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், வீடியோ வெளியிடுவதற்கு முன்பாகவே தன்னைக் கைது செய்ய காவல்துறை தனது இல்லத்திற்கு வந்துள்ளது.

PREV
14
மாரிதாஸ்

மாரிதாஸ் மலைச்சாமி, தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஒரு பிரபல யூடியூபர், பேராசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் மற்றும் நூலாசிரியர். அவர் தனது "Maridhas Answers" என்ற யூடியூப் சேனல் மூலம் தேசியவாத கருத்துக்கள், சமூக பிரச்சினைகள், அரசியல் மற்றும் அறிவியல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுவர். இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு வந்தார். குறிப்பாக திமுகவை அதன் தலைவர்கள், தோழமைக்கட்சிகளை விமர்சித்து வந்தார்.

24
கரூர் துயர சம்பவம்

இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வந்தார். அதாவது விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என தெரிவித்து எக்ஸ் ததளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், விஜயோடு 1000 கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் இப்படி குறுக்கு புத்தியல் நீதிமன்றம் வழியாக என்ற போர்வையில் திமுக ஒரு தரப்பை அழிக்கவோ அவமானப்படுத்தவோ முடியும் என்றால் இது இன்று விஜய்க்கு நாளை நமக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு வெக்கமே இல்லாமல் மீடியா கூட்டம் ஒத்து ஊதுவதாக விமர்சித்தார்.

34
திமுக குறித்து விமர்சனம்

இதெல்லாம் வெக்கமா இல்லையா திமுக? நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இந்த நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன என்பது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

44
யூடியூபர் மாரிதாஸ் கைது

இந்நிலையில் நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என கூறயிருந்த நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர். இதனை பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். என் இல்லத்திற்கு காவல்துறை கைது செய்ய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories