பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பத்திரப்பதிவுத் துறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

Published : Aug 27, 2025, 08:22 AM IST

ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

PREV
14
சுபமுகூர்த்த தினம்

இடம் மற்றும் காலி மனைகளை வாங்கும் போது நல்ல நாட்கள் சுபமுகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் என்று பார்த்து வாங்குவது தமிழர்களின் வழக்கம். அதன்படி தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பது வழக்கம். ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆவணி மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24
பத்திரப்பதிவுத் துறை

இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

34
ஆவணி மாதம்

தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

44
முன்பதிவு வில்லைகள்

எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories