டிராக் பேண்ட் சர்ட்டோடு ஸ்டாலினுக்கு டப் கொடுக்கும் எடப்பாடி.! வாக்கிங்கில் அசத்தல்

Published : Jul 08, 2025, 09:19 AM IST

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இன்று காலை நடைபயிற்சி மூலம் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை கேட்டறிந்தார்.

PREV
15
சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக சார்பாக கள நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய தினந்தோறும் கட்சி நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் கூட்டத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நடத்தி வருகிறார். 

தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் சூட்டிங் முடித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றவுள்ளார்.

25
எழுச்சி பயணத்தை தொடங்கிய எடப்பாடி

இந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக, மீண்டும் ஆட்சியை பிடிக்க களத்தில் இறங்கியுள்ளது. பிரம்மாண்ட கூட்டணியை அமைக்க திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, முதல் கட்டமாக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். விரைவில் இன்னும் ஒரு சில கட்சிகளை தங்கள் அணியில் இணைக்க காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

 “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளார். இந்தப் பயணம் “புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்” எனப் பெயரிடப்பட்டு, முதல் கட்டமாக ஜூலை 7 முதல் ஜூலை 21, 2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்படுகிறது.

35
கோவையில் 100க்கு 100 வெற்றி

கோவையில் தொடங்கிய இந்த பயணத்தில் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அடுத்தாக

துடியலூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வேனில் இருந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி எழுச்சி பயணம் கோவையில் துவக்கி உள்ளோம். கோவை மாவட்டம் அதிமுகவிற்கு ராசியான மாவட்டம், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 100/100 வெற்றியை பெற்றது கோவை மாவட்டத்தில்,

அதே போல் 2026லும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். 8 பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நான் கொண்டு வந்த திட்டத்திற்கு உதயநிதி ஸ்ட்டிக்கர் ஒட்டினார். திமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி கமிஷன், கரப்ஷன் திமுக என விமர்சித்தார்.

45
210 இடங்களை கைப்பற்றும் அதிமுக

எப்போது பார்த்தாலும் கடன் வாங்கி மகளிர் உரிமை தொகை வழங்குகிறீர்களே வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியவர் கடன் வாங்குவதில் மு.க.ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர் என கூறினார். அதிமுக ஆட்சியை எண்ணி பார்த்து எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். குடும்ப ஆட்சியை அகற்றுவோம் அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம், 

2026ல் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளை வெல்லும் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். 

55
கோவையில் எடப்பாடி வாக்கிங்

இதனையடுத்து இன்று காலையில் தனது இரண்டாவது நாள் எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். கோவையில் நடைபயிற்சி சென்ற எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories