சிதம்பரம் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள செம்மங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. சாலையின் நடுவே அமைந்துள்ள அந்த தண்டவாளம் அருகே வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் ஒட்டுநர் கடக்க முயன்றுள்ளார்.
23
பள்ளி வேன் மீது ரயில் மோதல்
அப்போது அவ்வழியாக வந்த திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பள்ளி வேன் மோதியது. இதில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பள்ளி மாணவர் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த வலி தங்க முடியாமல் அலறி கூச்சலிட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் விரைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தைகள் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
33
3 பள்ளி மாணவர்கள் பலி
இதில், பள்ளி மாணவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளிக்கு சென்ற குழந்தைகள் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்த பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரயில் வருவதை ஓட்டுநர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ரயில்வே கேட்டில் பணியிருந்த ஊழியர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதால் விபத்து நடந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.