Liquor Smuggling
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று நடைபெற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Liquor from Puducherry
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
Cuddalore SP Warning
குற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய எஸ்.பி. ஜெயக்குமார், மதுபானம் கடத்துவோரும், விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் தெரிவித்தார்.
Cuddalore SP Jayakumar
மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனங்களை முறையாக சோதனை செய்து, சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
TASMAC
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.