Published : Aug 20, 2025, 12:57 PM ISTUpdated : Aug 20, 2025, 01:03 PM IST
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைவார் என்று முத்தரசன் கூறியதற்கு, எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். தான் போட்டியிடும் தொகுதியில் யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆளாக பாஜகவுடன் கூட்டணியை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி,
பொதுமக்களிடம் அதிமுக ஆட்சி கால திட்டங்களை எடுத்துரைத்தும், திமுக ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் எனவும், சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தனது கட்சியின் மாநாட்டில் பேசியிருந்தார்.
24
இபிஎஸ்- முத்தரசன் மோதல்
மேலும் அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட , பொறுப்பிகளை வைத்திருக்க கூடியவர் கவனமாக பேச பேண்டும். எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கப்போவதாக ஆரவாரமாக முழங்கினார். ஆனால் அது நடைபெறாத காரணத்தினால் விரக்தியில் எடப்பாடி இருப்பதாகவும் தெரிவித்தார். முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணி குறித்து ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது துரோகத்தின் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லையென கூறியவர், எடப்பாடி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார் என கூறியிருந்தார்.
34
என்னை தோற்கடிக்க முடியாது- இபிஎஸ்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் அதிமுக செயல்படும் என கூறினார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகின்ற சொந்த தொகுதியில் தோற்க்கடிக்கப்படுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதற்கு உங்க அப்பாவே வந்தாலும் முடியாது என ஆவசேமாக பதில் அளித்தார். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தான் நீங்கள் இருந்தீர்கள். அப்போது சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்று காட்டியுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டணியாக இருந்தாலும் மக்களுக்கு குரல் கொடுக்கனும்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பிரச்னை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும், கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சுட்டிக்காட்டினேன் என இபிஎஸ் தெரிவித்தார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தன்னை தோற்கடிக்க முடியாது என உறுதியாக கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அந்த வகையில் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சேலம் வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடு காட்டாமல் பாராட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.