இது தொடர்பாக பேசிய இபிஎஸ், ''திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மாணவர்களின் போதைப்பழக்கம் அதிகரித்து விட்டது. போதைப்பழக்கம் அதிகரித்ததால் வன்முறை அதிகரித்து விட்டது. தமிழக டிஜிபி ஓய்வு பெற்ற பிறகு நிரந்த டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. நிரந்தர டிஜிபி இல்லாமல் எப்படி சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
திமுகவை மக்கள் புறக்கணித்து விட்டனர்
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தினமும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் 2 முறை வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக ஆட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அடுத்த ஆண்டு பொங்கல் விழாவில் அதிமுக ஆளும் கட்சியாக பங்கேற்கும்.