தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் கீரியும், பாம்புமாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த இரண்டு கட்சிகளும் தான் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்து வருகின்றன. இப்போதும் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் ஸ்டாலினும், திமுகவையும், ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமியும் அரசியல்ரீதியாக சராமரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் குணமடைய தான் கடவுளை வேண்டுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தமிழகத்தின் அரசியல் மாண்பை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
திமுக உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி
என்னதான் அரசியல்ரீதியாக இருவரும் ஒருவவரை ஒருவர் வசைபாடினாலும், அரசியல் வேறு, தனிப்பட்ட விஷயம் வேறு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டதாக அதிமுக கட்சியினர் மட்டுமின்றி திமுக உடன்பிறப்புகளும் நெகிழ்ந்து பேசி வருகின்றனர்.