எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் ஏற்றங்களும் உண்டு. இறக்கங்களும் உண்டு. அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வந்தபோதிலும் குலதெய்வ வழிபாடு பாசிடிவ் எனர்ஜி கொடுப்பதாக இபிஎஸ் நம்புகிறார். இதேபோல் இபிஎஸ் எப்போதும் கையில் கயிறு அணிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
குலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இபிஎஸ் அங்கு வழிபாடு செய்த பிறகு கயிறுகளை அணிந்து கொள்கிறார். ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் அந்த கயிறுகளை மாற்றி வருகிறார் இந்த கயிறு அணிவதன் மூலம் தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் எனவும் தோல்வியிலிருந்து இந்த கயிறுகள் பாதுகாக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக உள்ளது.
வீட்டு உணவு பிரியர்
இது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் இதன் மூலம் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அரசியலில் பெரிய பதவிகள் பெற்ற போதிலும் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் விவசாய பணிகளை மேற்கொள்வதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும் எவ்வளவு பிஸியாக இருந்த போதிலும் வீட்டு உணவுகளை தான் எடப்பாடி பழனிசாமி அதிகம் விரும்பி உண்டு வந்தார் அவரது உணவு பட்டியலில் களி, கம்பங்கூழ் போன்ற நமது பாரம்பரிய உணவுகளும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.