ஏப்ரல் 1ம் தேதி சர்ப்ரைஸ்! குஷியில் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்! என்ன காரணம்?

Published : Mar 18, 2026, 03:25 PM IST

Holiday: ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

PREV
14
பள்ளி மாணவர்கள்

விடுமுறை என்ற செய்தியை கேட்டாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்கள், தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் போன்ற உள்ளூர் சார்ந்த முக்கிய நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் மார்ச் மாதம் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றாலும் அதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கோவில் திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அதிகம் கிடைக்கும்.

24
முன்கூட்டியே தேர்வு நடத்த திட்டம்

மேலும், ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி பள்ளி மாணவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

34
நெல்லையப்பர் கோவில்

ஏப்ரல் 1ம் தேதி பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்தது. இந்த நாளில் அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம் போன்றவை வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பழனி முருகன் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள்.

44
ஏப்ரல் 1ம் உள்ளூர் விடுமுறை

இதனால் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories