ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் செங்கோட்டையன்.? எடப்பாடி கையில் முக்கிய ஆயுதம்

Published : Oct 30, 2025, 11:28 AM IST

Sengottaiyan meets O Panneerselvam : பசும்பொன் தேவர் குருபூஜைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணம் செய்தது, தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, 

PREV
14

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுகவின் வெற்றிக்கு பெரும் சவாலாக உள்ளன. இந்தப் பின்னணையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியை ஒன்றிணைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வனம், போக்குவரத்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியவர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வலுவான செல்வாக்கு கொண்டவர்.

24

இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக தோல்வி மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உட்கட்சி பிளவு, அதிமுக மூத்த தலைவர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளருக்கும் 10 நாள் கெடு விதித்திருந்தார். இதனையடுத்து அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தார்.

34

இதனையடுத்து சிறிது காலம் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை தற்போது தொடங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வெகு விமர்சையாக குருபூஜை நடைபெற்று வரும் நிலையில், இந்தநிகழ்வில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.

44

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தோடு ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்திருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories