பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த அதிருப்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் வெளிப்படைாக கோரிக்கை விடுத்தார். மேலும் ஒருங்கிணைப்பு பணியை பொதுச்செயலாளர் 10 தினங்களில் தொடங்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நானே அந்தப் பணியை மேற்கொள்வேன் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
23
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
செங்கோட்டையனின் கருத்தால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து வகையான கட்சி பொறுப்புகளையும் பறித்து அதிரடி காட்டினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரில் பயணம் செய்து வருகிறார்.
33
பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் செங்கோட்டையன் விமானம் மூலம் மதுரை சென்ற நிலையில், விமான நிலையத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது காரில் ஒன்றாக பயணம் செய்வது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.