'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?

Published : Dec 23, 2025, 06:17 PM IST

அதிமுக மட்டும் தனியாக 170 தொகுதிகளில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு 23 தொகுதிக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக, அதிமுக கைகோர்த்துள்ளன. தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுகவும், பாஜகவும் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தின. 

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி,முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

24
பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் ஆகிய இருவரும் 'தமிழகத்தில் ஊழல் திமுக ஆட்சியை வீழ்த்தி விட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்' என்று தெரிவித்தனர். 

இந்த நிலையில், அதிமுக, பாஜக தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

34
அன்புமணி, ராமதாஸ் சமரசத்துக்கு இபிஎஸ் கேரண்டி

ஆனால் ஓபிஎஸ், டிடிவி இருவரையும் அதிமுகவில் சேர்க்க மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் இருவரையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவில் ராமதாஸ் அவரது மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைக்க இபிஎஸ் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

44
பாமக, பாஜகவுக்கு எத்தனை சீட்கள்?

மேலும் இன்றைய பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது அதிமுக மட்டும் தனியாக 170 தொகுதிகளில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. 

பாஜகவுக்கு 23 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பட்டியலை இபிஎஸ் பியூஸ் கோயலிடம் கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories