விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!

Published : Dec 23, 2025, 05:14 PM IST

தவெகவில் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ள பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் தனது ஆதரவாளர்களுடன் தவெக தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

PREV
14
போர்க்கொடி தூக்கிய அஜிதா ஆக்னஸ்

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், தவெகவில் உட்கட்சி பூசல் பெரிதாக வெடித்துள்ளது. அதாவது தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளராக உள்ள அஜிதா ஆக்னஸ் என்ற பெண் நிர்வாகி தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கவில்லை என போர்க்கொடி தூக்கியுள்ளார்.

24
விஜய் கார் முற்றுகை

தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த அஜிதா ஆக்னஸ், இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வந்தார். அவர் விஜய்யை சந்திக்க முடிவெடுத்த நிலையில், தவெகவினர் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தனது காரில் அலுவலகம் வந்தபோது அஜிதா ஆக்னசும், அவரது ஆதரவாளர்களும் விஜய்யின் காரை முற்றுகையிட்டனர்.

34
கண்டு கொள்ளாத விஜய்

தவெக நிர்வாகிகளும், பவுனசர்களும் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். விஜய்யும் தனது காரை முற்றுகையிட்ட அஜிதா ஆக்னஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அஜிதா ஆக்னஸ் அங்கிருந்து செல்லாமல் விடாப்பிடியாக இருந்ததால் தவெக இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சி.டி. நிர்மல் குமார் பேச்சுவார்த்தை

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. நிர்மல் குமார், ''விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தவெக கட்சியாக மாறியுள்ளது. மக்கள் இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் பொறுப்பில் இருந்த நிலையில், ஒரு சிலருக்கு கட்சியில் பதவி கிடைக்காமல் மனவருத்தம் ஏற்படுவது இயல்பானது. இது எல்லா கட்சியிலும் உண்டு. திமுகவை விட தவெகவில் ஜனநாயகம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து விஜய் முடிவெடுப்பார்'' என்றார்.

44
தவெக அலுவலகம் முன்பு தர்ணா

ஆனாலும் சி.டி. நிர்மல் குமாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அஜிதா ஆக்னஸ், 'ஒன்று விஜய்யை சந்திக்க எனக்கு அனுமதி வேண்டும். இல்லாவிடில் பொதுச்ச்செயலாளர் என்.ஆனந்த் வந்து பேச வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். 

ஆனால் விஜய்யும், ஆனந்தும் அவர்களை சந்திக்கவில்லை. இதனால் அஜிதா ஆக்னரும், அவரது ஆதரவாளர்களும் தவெக தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் பேசமால் நகர மாட்டேன்

''தலைவர் விஜய் வந்து பேச வேண்டும். இல்லையென்றால் இங்கு இருந்து நகர மாட்டேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. சாகும் வரை இங்கே தான் இருப்பேன்' என்று அஜிதா ஆக்னஸ் தெரிவித்துள்ளார். பெண் நிர்வாகியின் போராட்டத்தில் தவெக தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories