பிரிந்தது பிரிந்தது தான்.! ஓபிஎஸ்க்கு நோ சொன்ன எடப்பாடி

Published : Mar 27, 2025, 02:35 PM IST

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, நிலுவைத் தொகை மற்றும் இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்றும், திமுகவைத் தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

PREV
14
பிரிந்தது பிரிந்தது தான்.! ஓபிஎஸ்க்கு நோ சொன்ன  எடப்பாடி

EPS Amit Shah meeting : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பான விவரங்களை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, நேற்று முன் தினம்  உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை  உடனடியாக கிடைக்கக்  வேண்டும் என்று கோரிக்கை  மனு  அளித்ததாக தெரிவித்தார். 

24

அமித்ஷாவிடம் பேசியது என்ன.?

மகாத்மா காந்தி தேசிய ஊராட்ட வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வருகை தர வேண்டிய நிதி தாமதப்படுத்திருக்கிறது அதை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாகவும் கூறினார். மேலும் அதிமுகவின் கொள்கையை பொறுத்தவரை அண்ணாவின் காலத்திலும் சரி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்திலும் சரி அம்மா அவர்கள் காலத்திலும் சரி தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர வேண்டும் என்று நிலைப்பாட்டை அவரிடத்தில் வலியுறுத்தி மனுவாக  கொடுத்திருக்கின்றோம் என கூறினார். 
 

34

ஓபிஎஸ்க்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

மீண்டும் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார், பிரிந்தது பிரிந்தது தான். அதிமுக தொண்டர்களின் கோவிலாக இருக்கின்ற  தலைமை கழகத்தை ரவுடிகளை கொண்டு  எப்பொழுது உடைத்தார்கள்களோ அன்றைக்கே  அவர்கள் அந்த கட்சியில் இருப்பதற்கு  தகுதியில்லாதவர்கள் என கூறினார். எனவே மீண்டும் ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. கூட்டணி அமைக்கப்படும் பொழுது பத்திரிகையாளர்கள் அழைத்து  தகவல் கொடுக்கப்படும் என கூறினார்.

44

யாருடன் கூட்டணி.?

மேலும் அஇஅதிமுகவை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர மற்ற  எந்த கட்சியுடனும்  கூட்டணி அமைக்கும். தேர்தல் காலத்தில்  யார் யாரெல்லாம் ஒத்த கருத்துடன் அதிமுகவுடன் இருக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார் என்ற போஸ்டர்கள் அதிமுக சார்பாக ஒட்டப்பட்டு இருக்கிறதே என்ற கேள்விக்கு அதை நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று பதிலளித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories