admk eps
அதிமுகவில் அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக தேர்தல்களில் வெற்றியை பெற முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என கடந்த 7 ஆண்டுகளில் தொடர் தோல்விகளை மட்டுமே அதிமுக சந்தித்து வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
EPS
தொடரும் உட்கட்சி மோதல்
அதிமுகவில் கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கு முன்பாக மோதிக்கொள்ளும் காட்சி அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அதிமுவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய தேர்தலாக உள்ளது.
VIJAY EPS
மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை
அந்த வகையில் இந்த தேர்தலை பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து சந்திக்க வேண்டும் என தொண்டர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லையென உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ADMK EPS
அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.