இலவசமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா தொடங்கியது.! அறநிலையத்துறையின் சூப்பர் அறிவிப்பு

First Published | Nov 27, 2024, 7:39 AM IST

திருக்கோயில்களில் பௌர்ணமி பூஜை, இலவச திருமணங்கள், ஆன்மிகப் பயணங்கள் போன்ற பல்வேறு இலவச திட்டங்களை அறநிலையத்துறை செயல்படுத்துகிறது. மூத்த குடிமக்களுக்கு மானசரோவர், முக்திநாத், இராமேஸ்வரம், காசி ஆகிய இடங்களுக்கு ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடு பயணமும் நடத்தப்படுகிறது.

அறநிலையத்துறை திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி பள்ளிக்கல்வி, சமூகநலத்துறை, மருத்துவம் என முக்கிய துறைகளின் மூலம் திட்டங்கள் தீட்டப்பட்டாலும், இதில் முக்கியம் மற்றும் முன்னோடி திட்டமாக அறநிலையத்துறை சார்பாக பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், பௌர்ணமி திருவினக்கு பூஜை திட்டமானது திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 17 அம்மன் இதில் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் பௌர்ணமி தினத்தன்று 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கின்றனர்.

sekar babu

சீர் வரிசையோடு திருமணங்கள்

மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டும், இதர மூன்று பங்கு திருக்கோயில் நிர்வாகமும் வழங்குகிறது. மேலும் திருக்கோயில்கள் சார்பில் கட்டணமில்லாமல் சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.  2024 ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட 700 இணைகளுக்கான திருமணங்களில் 400 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்களின் பொருளாதார சூழல் மற்றும் அவர்களுடன் துணையாக சென்று உதவிடும் நிலை இல்லாமல் இருக்கின்ற மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் பல்வேறு ஆன்மிகப் பயணங்களை அரசு மானியத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.

Tap to resize

sekar babu

சீனாவிற்கு ஆன்மிக சுற்றுலா

அந்த வகையில் சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியம் ரூ.40ஆயிரத்திலிருந்து ரூ.50ஆயிரமாகவும். நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

இராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயணம், 2023 24 ஆம் நிதியாண்டில் ரூ.75 லட்சம் அரசு மானியத்தில் 300 மூத்த குடிமக்களும் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு 5.1.05 கோடி அரசு மானியத்தில் 420 மூத்த குடிமக்கள் வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

murugan temple

இலவச ஆன்மிக பயணம்

ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் திருக்கோயில்களுக்கும் ஆண்டுதோறும் தலா 1,000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Arupadai Veedu spiritual journey

அறுபடை முருகன் கோயிலுக்கு சுற்றுலா

இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்காக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ஆண்டாக சென்னை மண்டலத்திலிருந்து 90 நபர்களும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 60 நபர்களும், வேலூர் மண்டலத்திலிருந்து 50 நபர்களும் என மொத்தம் 200 நபர்கள் 3 நாட்கள் ஆன்மிகப் பயணமாக புறப்படுகின்றனர். 2025 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1.008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்வார்கள். இத்திட்டத்திற்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது. 

Latest Videos

click me!