Chennai rain
உருவாகிறது புயல்
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக வலுபெறக்கூடும். அந்த வகையில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
tamilnadu rain
இன்றைய அதிகன மழை எந்த மாவட்டங்கள்
இதன் காரணமாக இன்று (27-11-2024) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RAIN CHENNAI
நாளை மழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்
நாளை (28-11-2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WEATHERMAN
சென்னைக்கு இன்று மழை குறைவு
இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஹாட்ஸ்பாட். தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் போதுதான் சென்னைக்கு மிக கன மழை பெய்யும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றைய மழையை விட இன்று குறைவாகத்தான் பெய்யும் என கூறியுள்ளார்.