ரொம்ப ஓவரா ஆட்டம் போடாத கண்ணா.. இன்னும் 7 மாசம் தான் இருக்கு..! உதயநிதியை பஞ்சர் ஆக்கிய எடப்பாடி

Published : Sep 12, 2025, 09:56 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் 7 ஆண்டு காலத்தில் திமுகவின் ஆட்சி அதிகாரம் பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

PREV
14
ஓவரா ஆட்டம் போடாதீங்க

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐசியு.வில் போகப்போவதாக திமுக.வினர் சொல்கின்றனர். ஆனால் திமுக எப்பொழுதோ ஐசியு.க்கு சென்றுவிட்டது. இன்னும் 7 மாத காலம் அதான் அதன் பின்னர் உங்கள் கையில் இருக்கும் ஆட்சி அதிகாரம் பறிக்கப்படும். அதற்குள் இவ்வளவு ஆட்டம் போடாதீர்கள் என்று பேசினார்.

24
நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம்

மேலும் அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு. திருப்பூரில் ரூ.350 கோடியில் பிரமாண்டமான மருத்துவமனையை கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா 200 யூட்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். பெண்களின் நலனுக்காக அம்மா இருசக்கர வாகனத்தை மானிய விலையில் கொடுத்தது அதிமுக அரசு என அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.

34
திமுக செய்யும் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள்

தொடர்ந்து பேசுகையில், திமுக கட்சி செய்யும் தவறுகளை அனைத்து கூட்டணிக்கட்சிகளும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அழிந்து வரும் காங்கேயம் காளை இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவத்தை குழு அமைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது அதிமுக. உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தை ரூ.255 கோடியில் அமைத்து கொடுத்ததாக தெரிவித்தார்.

44
100 மடங்கு உயர்ந்த சமையல் பொருட்களின் விலை

மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அதிமுக மக்களை நம்பி இரு்கிகறது. திமுக கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கிறது. 2026ல் மக்களின் தீர்ப்பே இறுதியானது. திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. சமையல் பொருட்களின் விலை 100 மடங்கு உயர்ந்துள்ளது. திமுக அரசு அனைத்து துறையிலும் ஊழல் நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில் மெகா ஊழல் நடக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories