உங்களுக்கு யார் இந்த ரைட்ஸ் கொடுத்தது! அமுதா ஐஏஎஸ் அதிகாரியை சும்மா விடமாட்டேன்! ருத்தரதாண்டவம் ஆடிய இபிஎஸ்

Published : Oct 03, 2025, 11:11 AM IST

தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு செயலாளர் பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அதிகார மீறல் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

PREV
15
தவெக தலைவர் விஜய்

கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் எதிர்பாராத ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்ததை அடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

25
கரூர் சம்பவம்

41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கரூரில் இத்தகைய துயர சம்பவம் நடந்த போதிலும், அன்று இரவே விஜய் சென்னை புறப்பட்டு சென்றது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. இதை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் கரூர் சம்பவத்தில் திமுகவின் சதி இருப்பதாக பாஜக, அதிமுக, தவெகவினர் கூறி வருகின்றனர். அதேபோல் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில்: சி.எம் சார், என் மீது கோபம் இருந்தால் என்னை பழி வாங்குங்கள். தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் என்னுடைய வீடு அல்லது கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியமாகவும் தொடரும். இதோடு நிற்காது என கூறியிருந்தார்.

35
வருவாய் செயலாளர் அமுதா ஐஏஎஸ்

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் தமிழக அரசு தரப்பில் வருவாய் செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்தார். அதில் தவெகவினர் கொடுத்த கோரிக்கை மனுவிலேயே 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்களாகவே கூடுதல் நபர்கள் வரலாம் என்பதால் வேலுசாமிபுரத்தை ஒதுக்கினோம். காவல் துறை பாதுகாப்பை பொறுத்தவரை 50 பேருக்கு 1 போலீஸ் என்பதுதான் பொதுக்கூட்ட பந்தோபஸ்து விதி. 10,000 பேருக்கு 500 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர் என்பது தவறு. தவெக தலைவரின் வாகனம் வரும்போது, ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் கூட்டத்தை போலீசார் விலக்கிவிட்டார்கள். கூட்டம் நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

45
எடப்பாடி பழனிசாமி

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது கரூர் நடந்த சம்பவத்தை எப்படி ஒரு செயலாளர் சொல்ல முடியும். இது அவமதிப்பு, ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விட்டது. துறை செயலாளரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உங்களுடைய வேலை அரசியல் செய்வதல்ல உங்களுடைய துறையின் பணியை செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு இவர் ஏறினார், இவர் சென்றார், இவர் கையை காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய சொல்லாக இருக்கக் கூடாது.

55
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்

இவை எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுத்து இந்த தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, இன்றைக்கு ஒவ்வொருடைய வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அரசாங்கம் என்றால் அரசாங்கத்திலிருந்து மரம் காய்ச்சி கொடுப்பதில்லை. இங்கு இருக்கிற பொதுமக்களுடைய வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குறீங்க, நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு நிலை என்ன மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். மிகப் பெரிய சோகம், துயர சம்பவம் அதை போய் நியாயப்படுத்தி பேசியது எந்த விதத்தில் சரி ஒரு அரசு அதிகாரி பேசலாமா. அரசியல்வாதி பேசலாம் ஏனென்றால் தப்பித்துக் கொள்வதற்காக, ஆனால் ஒரு அரசு அதிகாரிகள் நடுநிலையோடு இருந்து தங்களுடைய பணியை செயல்படுத்த வேண்டும். இதுதான் நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஆட்சியில் பார்க்க முடியாது. இந்த ஆட்சியில் இருக்கின்ற அதிகாரி இடத்திலும் இந்த நியாயம் கிடைக்காது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories