விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு 9.06 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சாத்தூர், கூமாபட்டி, கிருஷ்ணன் கோவில், செங்குளம் என அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளுக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பதறியடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
22
ரிக்டர் அளவுகோளில் 3 புள்ளிகள் பதிவு
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ரிக்டர் அளவுகோளில் 3 புள்ளிகள் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்தியாவின் சில வடமாநிலங்களில் நில அதிர்வு அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இப்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.