Tamilnadu rain
மிரட்டிய மழை- ஷாக்கான மக்கள்
தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த தென் மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியுள்ளது. ஆரம்பமே சென்னை மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. எனவே இன்னும் 3 மாதங்கள் என்ன நடக்குமோ என இப்பவே அச்சப்பட தொடங்கிவிட்டனர்.
அந்த அளவிற்கு மழை தொடர்பான ரெட் அலர்ட் பொதுமக்கள் விழி பிதுங்க வைத்தது. கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. எனவே இந்த முறையும் அப்படி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சப்பட்டனர் அதற்கு ஏற்றார் போல் மழையும் சுமார் 24 மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்தது.
chennai rain
சென்னையில் கொட்டிய மழை- தேங்கிய நீர்
பல இடங்களில் 20 செமீ முதல் 30 செமீட்டர் வரை மழை பெய்தது. இன்றும் அதாவது 16ஆம் தேதியும் கன மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழை முழுவதுமாக நின்றுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் தேங்கிய நீர் வடிந்தது. பல இடங்களில் சாலை போக்குவரத்து சீரடைந்தது. வருவாய் பேரிடர் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்து விட்டது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழை இல்லை.
chembarambakkam
மீட்பு பணிகள் என்ன.?
சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்குப் பிறகு மழை அளவு 4.3 செ.மீ. மட்டுமே. திருவள்ளூர் மாவட்டத்தில் 4.9 செ.மீ. மட்டுமே. சென்னையில் கணேஷ்புரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற எல்லா சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் மழையின் காரணமாக குடிசைகள் 140 குடிசைகள் பாதிக்கப்பட்டதாகவும், 715 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் 512 பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 70 நிவாரண முகாம்கள் உள்ளன, அவற்றில் 2789 பேர் தங்கி உள்ளதாகவும் அவர்களுக்காக மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் 174 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைகளில் நீர் இருப்பு என்ன.?
அதே நேரத்தில் சென்னை மக்களை அச்சுறுத்துவது செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியாகும். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீர்வரத்து கிடு,கிடுவென அதிகரிதுள்ளது. எனவே தற்போது நீர்மட்டம் எந்த நிலையில் உள்ளது என நீர்வளத்துளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடியில் தற்போது 21.38 அடியாக நீர் இருப்பானது உள்ளது.
சோழவரம் மொத்த அடியான 18.86 கன அடியில் தற்பொழுது 3.98 கன அடி நீர் மட்டுமே உள்ளது. புழல் ஏரியின் 21.20 அடியில் தற்போது 16.57 அடி நீர் மட்டுமே உள்ளது. செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 13.61 அடி கன அளவு உள்ளது. வீராணம் ஏரியும் 15.60 கன அடியில் தற்போது 13.85 நீர்மட்டம் உள்ளது.
Andra pradesh water
கிடு,கிடுவென உயர்ந்த நீர்
மேலும் மேட்டூர் அணையின் 120 அடி நீர்மடத்தில் தற்போது 92 அடியாக உள்ளது பவானிசாகரில் 105 அடி கன நீர்மட்டத்தை தற்போது 88.31 அடி கன அடி நீர்மட்டம் உள்ளது. சென்னையின் நீர் ஆதாரமான ஏரிகளில் இரண்டு நாள் கன மழையில் புழல் ஏரி, வீராணம், தேர்வாய் கண்டிகையில் 50 சதவீதத்துக்கு மேல் கொள்ளளவு எட்டியுள்ளது.
குறிப்பாக தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பூண்டி 11.30% கொள்ளளவு எட்டியுள்ளது. புழல் ஏரி 69.73% கொள்ளளவு எட்டியுள்ளது. சோழவரம் ஏரி 13.78% கொள்ளளவு எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 35.06% கொள்ளளவு எட்டியுள்ளது கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 60.60% கொள்ளளவு எட்டியுள்ளது. வீராணம் ஏரி 70.59% கொள்ளளவு எட்டியுள்ளது