வேலைக்கு ஓய்வு- குடும்பத்தோடு சுற்றுலா
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடின வேலைகளுக்கு மத்தியில் எப்போது ஓய்வு கிடைக்கும் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என ஏராளமான மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இயற்கையான இடங்களாக தமிழகத்தில் ஊட்டி,கொடைக்கானல், குற்றாலம் என பல இடங்களுக்கு குடும்பத்தோடு செல்வார்கள். ஆனால் எங்கே செல்வது.? எந்த இடத்தை சுற்றிப்பார்ப்பது.? எங்கே தங்குவது என பல காரணத்தால் சுற்றுலாவை செல்ல தவிப்பார்கள். மேலும் பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கும். அவர்களுக்காகவே தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பல்வேறு டூர் பிளான் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக இன்ப சுற்றுலாவாக ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என பல இடங்களுக்கு பட்ஜெட்டில் அழைத்து செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆன்மிக பக்தர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோயில்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.